ஜப்பானின் அஸகி ஷிம்புன் செய்தியேடு 24ஆம் நாள் வெளியிட்ட செய்தியின்படி, தற்காப்பு சாதனங்கள் இடமாற்றம் பற்றிய 3 கோட்பாடுகளில் திருத்தம் செய்வதை ஆராய்ந்து வரும் ஜப்பானிய அரசு, இதன் முன்னுரையிலிருந்து அணு ஆயுதமின்மைக்கான 3 கொள்கைகள் பற்றிய அம்சங்களை நீக்கக் கூடும். இத்தகவல் பொதுவாக கவலை அளிப்பதாக உள்ளது.
அணு ஆயுதமின்மைக்கான 3 கொள்கைகள் என்றால் அணு ஆயுதங்களை வைத்திருக்காமை, தயாரிக்காமை, கொண்டு வராமை என்பது தான். ஜப்பானிய ஊடகங்கள் அண்மையில் வெளியிட்ட தகவல்களின்படி, இவ்வாண்டிற்குள், தேசிய பாதுகாப்பு உத்தரவாத நெடுநோக்குத் திட்டத்தைத் திருத்தம் செய்யும் போது, இதில் அணு ஆயுதமின்மைக்கான 3 கொள்கைகளுக்கு விதிவிலக்கு வழங்குவதை ஜப்பானிய அரசு ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கின்றன. இதன் மூலம், அவசர நிலைமை நிகழும் போது, ஜப்பானுக்குள் அணு ஆயுதங்களை கொண்டு வரலாம். இது குறித்து, ஜப்பானிய பொது மக்கள் தொடர்ந்து எதிர்பார்ப்பு தெரிவித்தனர்.
