சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், பாகிஸ்தான் அரசுத் தலைவர் சார்டாரி ஆகியோர், சீன-பாகிஸ்தான் கூட்டு விண்வெளி பயணம் குறித்து ஒருவருக்கொருவர் வாழ்த்து செய்தியை அனுப்பினர். ஷிச்சின்பிங் வாழ்த்து செய்தியில் கூறுகையில், இரு நாட்டு விண்வெளி வீரர்கள் விண்ணில் பறந்து கூட்டாக ஆய்வு செய்வது, இரு நாட்டு ஆழ்ந்த நட்பை வெளிக்காட்டி, இரு நாட்டு ஒத்துழைப்பின் புதிய சாதனையாகவும் திகழ்கிறது. பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுடன் இணைந்து, விண்வெளி துறையில் சர்வதேச ஒத்துழைப்பை ஆழமாக்கி, விண்வெளி ஆய்வு சாதனைகளிலிருந்து மனித குலம் நலன் பெறப் பாடுபட சீனா விரும்புவதாகத் தெரிவித்தார்.
சீனாவுக்கு நன்றி தெரிவித்த சார்டாரி கூறுகையில், இந்த ஒத்துழைப்பு, சீன விண்வெளி அறிவியல் தொழில் நுட்பங்களின் முன்னேற்றங்களைக் காட்டியுள்ளது. அமைதியான முறையில், விண்வெளியைப் பயன்படுத்தும் சீனாவின் நிலைப்பாடும் இதன் மூலம் வெளிக்காட்டப்பட்டுள்ளது என்றார்.
