பெய்ஜிங்கில் சீன-அமெரிக்க வர்த்தக வாரியத்தைச் சேர்ந்த வேளாண் பணிக் குழுவின் முதலாவது கூட்டம்

அமெரிக்காவும் சீனாவும் நவம்பர் 23, 24 ஆகிய நாட்களில், பெய்ஜிங்கில், சீன-அமெரிக்க வர்த்தக வாரியத்தைச் சேர்ந்த வேளாண் பணிக் குழுவின் முதலாவது கூட்டத்தை நடத்தின.

இரு நாட்டு அரசுத் தலைவர்களின் பேச்சுவார்த்தையில் எட்டப்பட்ட முக்கிய ஒத்த கருத்துக்களை வழிக்காட்டலாக கொண்டு,  வேளாண் உற்பத்திப் பொருட்களுக்கான கண்காணிப்பு, சந்தை நுழைவு, வேளாண் உற்பத்திப் பொருட்களின் வர்த்தகம் முதலியவை குறித்து இரு தரப்பினரும் நேர்மையாகவும் ஆழமாகவும் ஆக்கப்பூரவமாகவும் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டனர்.

தத்தமது வேளாண் துறைகளிலுள்ள சிக்கல்களுக்கு தீர்வு கண்டு, சீன-அமெரிக்க பொருளாதார மற்றும் வர்த்தக உறவு சீராகவும் நிலையாகவும் வளர்ந்து வருவதற்குத் துணை புரியும் வகையில், இரு தரப்பும் இக்குழுவின் மூலம், தொடர்புகளை வலுப்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author