சீன-அமெரிக்கப் பொருளாதார மற்றும் வர்த்தக உறவு பற்றிய சீனாவின் நிலைப்பாடு

சீனா உள்ளிட்ட நாடுகளின் மீது கூடுதல் சுங்க வரி வசூலிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது குறித்து, சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் குவோ ஜியாகுன் நவம்பர் 25ஆம் நாள் கூறுகையில், சீன-அமெரிக்கப் பொருளாதார மற்றும் வர்த்தகப் பிரச்சினை பற்றிய சீனாவின் நிலைப்பாடு நிலையாகவும் உறுதியாகவும் உள்ளது. சுங்க வரி போர் மற்றும் வர்த்தகப் போர், எந்த ஒரு தரப்பின் நலன்களுக்குப் பொருந்தாது என்றும், சமத்துவம், மதிப்பு, பரஸ்பர நலன் ஆகியவற்றைக் கொண்ட அடிப்படையில் இரு தரப்பும் தொடர்புடைய பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும், சீனாவும் அமெரிக்காவும், இரு நாட்டு அரசுத் தலைவர்கள் எட்டியுள்ள முக்கிய ஒத்தக் கருத்துக்களைச் செவ்வனே செயல்படுத்தி, இரு நாட்டுப் பொருளாதார மற்றும் வர்த்தக உறவின் சீரான வளர்ச்சிப் போக்கினைப் பேணிக்காக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author