கட்சியின் ஒழுங்கு விதிகள் மற்றும் அமைப்புமுறையின் கட்டுமானத்துக்கு ஷி ச்சின்பிங் உத்தரவு

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒழுங்கு விதிகள் தொடர்பான பணிக்கு கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும் அரசுத் தலைவருமான ஷிச்சின்பிங் அண்மையில் முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். இதில் அவர் கூறுகையில், கடந்த 5 ஆண்டுகளாக, கட்சி மத்தியக் கமிட்டி ஒட்டுமொத்த நிலையில் தொலைநோக்குடன் விதிமுறையின்படி கட்சியை ஒழுங்கு செய்யும் பணியை முன்னேற்றி வருவதோடு, கட்சியின் ஒழுங்கு விதிகள் மற்றும் அமைப்புமுறையின் கட்டுமானம் உறுதியுடன் மேற்கொள்ளப்பட்டு பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளது என்றார். மேலும், புதிய பயணத்தில் கட்சியின் 20ஆவது மத்தியக் கமிட்டியின் 5ஆவது முழு அமர்வின் குறிக்கோளை செயல்படுத்தி, விதிமுறையின்படி கட்சியை ஒழுங்கு செய்வதை அடிப்படை முறையாக கொண்டு, கட்சியின் ஒழுங்கு விதிகள் மற்றும் அமைப்புமுறையின் கட்டுமானத்தை உயர்தர நிலையில் முன்னேற்ற வேண்டும் என்றும், கட்சியின் ஒழுங்கு விதிகள் நாட்டின் சட்ட விதிகளுடனான ஒருங்கிணைப்புக்கு முக்கியத்துவம் அளித்து, கட்சியின் முழுமையான மற்றும் கண்டிப்பான சுய ஆட்சியை விடா முயற்சியுடன் முன்னெடுத்து செல்வதற்கும், சீனத் தனிச்சிறப்புடைய சோஷலிச இலட்சியத்தில் கட்சியின் உறுதியான தலைமை பங்கினை உறுதிப்படுத்துவதற்கும் அமைப்புமுறை சார் வலிமைமிக்க உத்தரவாதம் வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Please follow and like us:

You May Also Like

More From Author