பாலஸ்தீன மக்களுடனான சர்வதேச ஒற்றுமை தினத்தின் நினைவுக்கூட்டத்துக்கு ஷிச்சின்பிங் வாழ்த்து

பாலஸ்தீன மக்களுடனான சர்வதேச ஒற்றுமை தினத்தின் நினைவுக்கூட்டத்தை 23ஆம் நாள் ஐ.நா. நடத்தியது. இது குறித்து சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் வாழ்த்துச் செய்தியை அனுப்பினார்.

அப்போது அவர் கூறுகையில், பாலஸ்தீனப் பிரச்சினையைத் தீர்க்கும் வகையில், இருநாடுகள் தீர்வு என்ற சரியான திசையைக் கடைப்பிடித்து, பாலஸ்தீனம்-இஸ்ரேல் அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க ஊக்குவிப்பது, முக்கியதுவம் வாய்ந்தது என்று குறிப்பிட்டார். மேலும், பாலஸ்தீன மக்களுடனான ஒற்றுமை குறித்த சர்வதேச சமூகத்தின் ஒருமித்த கருத்தையும் வாக்குறுதியையும், உண்மையான செயல்களாக மாற்றுவதன் மூலம், காசா பகுதியில் நீடித்த போர்நிறுத்தத்துக்காக முயற்சி மேற்கொண்டு, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

பாலஸ்தீன மக்கள் தங்கள் சட்டபூர்வமான தேசிய உரிமைகளை மீட்டெடுப்பதற்கான நியாயமான லட்சியத்திற்கு சீனா எப்போதும் ஆதரவளித்து வருகிறது. மத்திய கிழக்கில் நீண்டகால அமைதியை மேம்படுத்தவும், உலகளாவிய நிலைத்தன்மை மற்றும் செழுமைக்கு பங்களிக்கவும், அமைதியை விரும்பி நீதியை பேணிக்காக்கும் அனைத்து நாடுகளுடன் இணைந்து பணியாற்ற சீனா விரும்புகிறது என்றும் அவர் வலியுறுத்தினார்.

Please follow and like us:

You May Also Like

More From Author