2025ஆம் ஆண்டின் ஜூலை முதல் நாள், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி நிறுவப்பட்ட 104ஆவது ஆண்டு நிறைவு தினமாகும்.
இந்தக் காலக்கட்டத்தில், இக்கட்சியின் சுயப் புரட்சி குறித்து விளக்கமளிக்கப்படுகிறது.
சீர்கேட்டுப் பிரச்சினை என்பது பல்வேறு நாடுகளின் அரசியல் கட்சிகள் ஆளும் போது, சிக்கலான சவாலாகும்.
மேலை நாடுகளின் கட்சகள் மாற்று வழியிலான தேர்தல் மூலம் ஊழல் பிரச்சினையைத் தீர்த்து வருகின்றன. இதற்கு மாறாக, சீன கம்யூனிஸ்ட் கட்சி ”சுயப் புரட்சி” என்ற பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளது.
2012ஆம் ஆண்டில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி பொதுச் செயலாளராக ஷிச்சின்பிங் பொறுப்பேற்ற உடனேயே, இக்கட்சியின் 8 விதிமுறைகளை வெளியிட்டுள்ளார். சிக்கனமாக செயல்பட்டு, சரியான முறையில் பயணம் மேற்கொண்டு, கூட்டங்களின் நடவடிக்கைகளை சுறுக்க வேண்டும் என்பது இதில் இடம்பெறுகின்றன.
நீண்டகாலமாக கட்சி ஆளும் காலக்கட்டத்தில், சுய புரட்சி எனும் அமைப்புமுறையின் புத்தாக்கத்தை இக்கட்சி தொடங்கியுள்ளது.
மக்கள் கண்காணிக்க வேண்டும் என்ற கருத்தை இக்கட்சியின் தொடக்க காலக்கட்டத்தில் சீன முன்னாள் அரசுத் தலைவர் மாசேதூங் முன்வைத்தார். அரசை மக்கள் கண்காணிப்பதன் மூலம், அரசு விழிப்பை தளர்த்துவதைத் தவிர்க்கும்.
2021ஆம் ஆண்டு, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் பன்முகங்களிலும் கட்சியைக் கண்டிப்பான முறையில் ஒழுங்கு செய்வதை வலுப்படுத்துவதன் மூலம், இக்கட்சி சுய புரட்சியை மேற்கொள்ள வேண்டும். கட்சியின் ஊழலைக் குறைப்பது, அமைப்புமுறை சீர்திருத்தம், தத்துவ புத்தாக்கம், சுய ஆற்றலை வலுப்படுத்துவதன் மூலம், உள்பகுதியிலிருந்து அபாயத்தைக் கட்டுப்படுத்தி, இக்கட்சியின் சீரான வளர்ச்சியை உத்தரவாதம் செய்ய வேண்டும்.
மக்களின் கண்காணிப்பு மற்றும் சுய புரட்சி என்பது மக்களுக்கு நன்மை பயக்க இக்கட்சி முயற்சி செய்வதற்கான சாராம்சமாகும். மக்களின் இன்பமான வாழ்க்கைக்கு நடைபோடுவது, ஆரம்பக் காலத்தில் இருந்த கட்சியின் கனவு மற்றும் கடமையை நினைவில் வைக்க வேண்டும் எனும் கருத்து வெளியிடப்பட்டது.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி சுய புரட்சி தத்துவம் மற்றும் நடைமுறையாக்கத்தின் மூலம், அரசியல் நாகரிகத்தின் பல்வகை தன்மை, ஒரே மாதிரியால் கட்டுப்படுத்தப்பட கூடாது. பல்வேறு நாடுகள் ஒன்றுடன் ஒன்று நாட்டின் நிர்வாக அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டு, மனித குலத்தின் அரசியல் நாகரிகம் மேலும் உயர்ந்த நிலைக்கு நடைபோடுவதைக் கூட்டாக முன்னேற்றலாம் என்பது குறிப்பிடத்தக்கது.