அக்டோபர் 30ஆம் நாள் சீன ஊடகக் குழுமத்தைச் சேர்ந்த சிறந்த திரைப்பட நிகழ்ச்சியான பெரு கண்காட்சி லிமாவில் துவங்கியது.
பாரம்பரிய நட்பைத் தொடர்ந்து வெளிக்கொணர்ந்து, ஒன்றுக்கு ஒன்று நலன்சார் ஒத்துழைப்பை ஆழமாக்கி, இரு நாட்டுப் பன்முக நெடுநோக்குக் கூட்டாளி உறவு புதிய கட்டத்தில் காலடியெடுத்துவைப்பதை முன்னேற்ற வேண்டும் என்று இவ்வாண்டின் ஜூன் திங்களில் பெய்ஜிங்கில் பெரு அரசுத் தலைவர் டினா பொலுவார்டேயுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்ட போது சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் தெரிவித்ததாக சீன ஊடகக் குழுமத்தின் இயக்குநர் ஷென் ஹை சியோங் கூறினார். அவர் மேலும் கூறுகையில் இரு நாட்டு அரசுத் தலைவர்களின் ஒத்த கருத்துக்களை ஆக்கப்பூர்வமாகச் செயல்படுத்துவது, இரு நாடுகளுக்குமிடையிலான மனித தொடர்பு பரிமாற்றத்தை மேலும் நெருக்கமாக்குவது, இரு நாட்டு நட்பை இருநாட்டு மக்களின் இதயங்களில் ஆழமாக வேரூன்றுவதை மேம்படுத்துவது, இரு நாட்டு உறவுக்கு சிறந்த புதிய எதிர்காலத்தை கூட்டாக உருவாக்குவது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இப்பெரு கண்காட்சி நடத்தப்பட்டது என்றார்.