திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் ராஜகோபுரத்தில் எவ்வித பாதுகாப்பும் இன்றி பெண்கள், குழந்தைகள் அமர்ந்திருந்த வீடியோ வெளியாகியுள்ளது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் குடமுழுக்கு விழா வரும் 7ஆம் தேதி நடைபெறுகிறது.
இந்த சூழலில், சுமார் 157 அடி உயரமுள்ள ராஜ கோபுரத்தின் மேல் தளத்தில் 4 ஆண்கள், 3 பெண்கள், 2 குழந்தைகள் அமர்ந்திருந்தனர். இதனைப் பார்த்த கோயில் பணியாளர்கள் மற்றும் காவல்துறையினர் அவர்களைப் பாதுகாப்பாகக் கீழே இறக்கி எச்சரித்து அனுப்பியுள்ளனர்.
விசாரணையில், கோபுரத்தின் மேல் அமர்ந்திருந்த ஆண்கள் அர்ச்சகர்கள் எனவும், பெண்கள் அவர்கள் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.