இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி மற்றும் நாசர் ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ள ‘ட்ரெய்ன்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரைலர் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. படத்தின் வெளியீட்டிற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், “ரயிலுக்குள் ஒரு போர்” என்ற அதிரடியான வாசகத்துடன் கூடிய புதிய சுவரொட்டியுடன் வெளியாகியுள்ள இந்த முன்னோட்டம் படத்தின் மீதான எதிர்பார்ப்பை உச்சத்திற்குக் கொண்டு சென்றுள்ளது.
நீண்ட நாட்களாகத் தயாரிப்பில் இருந்த இத்திரைப்படம், வருகிற டிசம்பர் 4-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது. ஏற்கனவே ‘பிசாசு 2’ திரைப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்த விஜய் சேதுபதி, இப்படத்தின் மூலம் முதல்முறையாக மிஷ்கின் இயக்கத்தில் முழுநீளக் கதாநாயகனாகக் களமிறங்கியுள்ளார். ஒரு ரயில் பயணத்தின் போது நடக்கும் மர்மங்கள், எதிர்பாராத சிக்கல்கள் மற்றும் உயிர் பிழைப்பதற்கான போராட்டத்தை மையமாக வைத்து, முழுக்க முழுக்க ரயிலுக்குள்ளேயே நகரும் பரபரப்பான சண்டை மற்றும் மர்மத் திரைப்படமாக இது உருவாகியுள்ள நிலையில், தணிக்கை வாரியம் இப்படத்திற்கு ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது.
பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு தனது ‘வி கிரியேஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் பிரம்மாண்டமாகத் தயாரித்துள்ள இப்படத்தில் மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே இணைந்துள்ளது. விஜய் சேதுபதி மற்றும் நாசருடன் ஸ்ருதி ஹாசன், நரேன், யூகி சேது, கே.எஸ். ரவிகுமார், சம்பத் ராஜ், கலையரசன், ஜெயராம், டிம்பிள் ஹயாதி, வினய் ராய் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
The wait is over!
#TRAIN Trailer has arrived!Witness the high-octane action unfold now.
https://t.co/eKbAh4RArx
@mysskindirector @VijaySethuOffl @shrutihaasan @nasser_kameela @ksravikumardir @ira_dayanand @itsNarain @preethy_karan @KalaiActor #YugiSethu @ActorRohan02 @fowziafathima @editorsriwat @shaban2k #TapasNayak #StreetLight @vijaytelevision @RIAZtheboss @ParasRiazAhmed1 @teamaimpr @saregamasouth
— Kalaippuli S Thanu (@theVcreations) November 27, 2026
இப்படத்திற்குக் கதை, திரைக்கதை எழுதி இயக்கியுள்ள மிஷ்கின், இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராகவும் புதிய அவதாரம் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், சுமார் 21 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் சினிமாவிற்குத் திரும்பியுள்ள ஃபௌசியா பாத்திமா ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீ வாட்சன் மற்றும் ஷபான் ஆகியோர் படத்தொகுப்பு பணிகளைக் கவனித்துள்ளனர். தற்போது வெளியாகியுள்ள ட்ரைலர் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.


