கேரள ‘ஏஐ கிட்’ ரவுல் ஜோன் அஜுவின் மாஸ் சாதனை‌….

Estimated read time 1 min read

கேரளாவைச் சேர்ந்த 17 வயது இளம் தொழில்முனைவரான ரவுல் ஜோன் அஜு, ரஷ்யாவின் மாஸ்கோவில் நடைபெற்று வரும் சர்வதேச செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் செல்ஃபி எடுத்துப் பதிவிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. ‘AI Journey 2026’ என்ற இந்த மூன்று நாள் மாநாடு நவம்பர் 26 அன்று தொடங்கிய நிலையில், புதின் மற்றும் கஜகஸ்தான் அதிபர் ஆகியோரைச் சந்தித்த இளம் திறமையாளர்களில் ரவுலும் ஒருவர் என ரஷ்யத் தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

‘இந்தியாவின் ஏஐ கிட்’ என அறியப்படும் ரவுல், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்தச் சந்திப்பு குறித்து நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார். சாதாரணமாக வீடியோக்கள் எடுத்துக் கொண்டிருந்த ஒரு சிறுவனாக இருந்து, 17 வயதில் அதிபர் புதினைச் சந்திக்கும் அளவுக்கு வாழ்க்கை தனக்குக் கனவிலும் நினைத்திராத வாய்ப்புகளைத் தந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஒன்பது வயதிலேயே சுயமாகச் செயற்கை நுண்ணறிவைக் கற்றுக்கொள்ளத் தொடங்கிய ரவுல், ‘AI Realm Technologies’ என்ற ஸ்டார்ட்அப் நிறுவனத்தைத் தொடங்கி நடத்தி வருகிறார். இந்நிறுவனம் தற்போது 15 பேருக்கு வேலைவாய்ப்பு அளிப்பதோடு, உலகம் முழுவதும் சுமார் 5 லட்சம் மாணவர்களுக்கு ஏஐ பயிற்சியும் அளித்துள்ளது.

வீடியோ எடிட்டிங் மூலம் தொழில்நுட்பத்தில் ஆர்வம் வந்ததாகவும், தந்தைக்குக் கிடைத்த அடோபி பணியின் மூலம் பிரீமியம் கருவிகளைப் பயன்படுத்தி ஏஐ பற்றித் தெரிந்து கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், பள்ளி அறிவியல் திட்டத்திற்காக ‘மீபாட்’ என்ற ரோபோவையும், ‘திங்க் கிராஃப்ட்’ தளத்தையும் உருவாக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

View this post on Instagram

A post shared by Raul John Aju (@raul_the_rockstar)

“>

பல பதின்வயதினரும் பாக்கெட் மணிக்குப் பெற்றோரை எதிர்பார்க்கும் நிலையில், ரவுலின் நிறுவனத்தில் அவரது தந்தையே பணியாற்றி மாதம் 2 லட்சம் ரூபாய் சம்பளம் பெறுவது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்கும் இந்த மாநாட்டில் ரவுலின் சாதனை தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author