சீன ஊடகக் குழுமம் தயாரித்த பாரம்பரிய பாதுகாவலர் என்னும் சிறப்பு நிகழ்ச்சியின் ஒளிப்பரப்புக்கான துவக்க விழா நவம்பர் 27ஆம் நாள் இலங்கையின் கொழும்பு நகரில் நடைபெற்றது. ஆங்கிலம், சிங்களம், தமிழ் ஆகிய மொழிகளில் இந்நிகழ்ச்சி இலங்கையின் முக்கிய ஊடகங்களில் ஒளிப்பரப்பப்படும். இந்நாட்டின் தலைமையமைச்சர் ஹரிணி அமரசூரிய அம்மையார் இவ்விழாவில் உரை நிகழ்த்தினார்.
அப்போது அவர் கூறுகையில், பண்பாடு மற்றும் நாகரிகம் பற்றிய சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்கின் கருத்துக்களை, இலங்கை மக்கள் ஆழமாக அறிந்து கொள்வதற்கு இந்நிகழ்ச்சி பெரும் துணைப் புரியும். பல்வேறு நாடுகள் பண்பாட்டுப் பாரம்பரியங்களைப் பேணிக்காப்பதோடு எவ்வாறு நவீனமயமாக்கத்தை முன்னேற்றுவது என்பது குறித்து, சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்கின் கருத்துக்கள் மதிப்புள்ள சிந்தனையை வழங்கியுள்ளன.
சீனாவின் தொல் பொருட்களுக்கான பாதுகாப்பு மற்றும் பயன்பாடு, பண்பாட்டுப் பாரம்பரியங்களுக்கான பாதுகாப்பு மற்றும் பரவல் ஆகியவற்றில் சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் பெரும் கவனம் செலுத்தி, தொடர்புடைய பணியை வடிவமைத்து விரைவுபடுத்துவது பற்றிய கதைகள் இந்நிகழ்ச்சியில் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.
இலங்கையின் அரசியல், பொருளாதாரம், பண்பாடு, கல்வி, ஊடகம் உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த 150க்கும் மேலான விருந்தினர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.
