சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் நவம்பர் 27ஆம் நாள் கூறுகையில், புதிய வளர்ச்சி வங்கியின் தலைவர் தில்மா ரூசெஃப் அம்மையார், உலக வங்கித் தலைவர் அஜய் பங்கா, சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை இயக்குநர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா அம்மையார், உலக வர்த்தக அமைப்பின் பொது இயக்குநர் இவேலா அம்மையார் உள்ளிட்ட சர்வதேசப் பொருளாதார அமைப்புகளின் பொறுப்பாளர்களுடன், சீனத் தலைமையமைச்சர் லீச்சியாங் டிசம்பர் 2ஆம் நாள் முற்பகல் ஃபூஜியான் மாநிலத்தின் சியாமென் நகரில், “புத்தாக்கத்தின் மூலம் தொடர்ச்சியான அதிகரிப்பை ஊக்குவித்து, திறப்புப் பணியின் மூலம் கூட்டு வளர்ச்சியை முன்னேற்றுதல்” என்ற கருப்பொருள் கொண்ட பேச்சுவார்த்தையை நடத்த உள்ளதாக தெரிவித்தார்.
