33% மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவுக்கு அனைத்துக் கட்சிகளும் ஆதரவு தர வேண்டும்…. அமித் ஷா

Estimated read time 1 min read

மக்கள் பிரதிநிதித்துவத்தில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்கவும் வலுப்படுத்தவும் வேண்டும் என்பதே மோடி அரசின் உறுதியான நோக்கமாக இருந்து வருகிறது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை 132-வது அரசியலமைப்புத் திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளதால், பெண்கள் பல காலமாகக் காத்திருந்த கனவு நிறைவேறப் போகிறது; பெண் சக்தி வந்தனச் சட்டத்தின் மூலம் மக்களவை மற்றும் சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு இப்போது நனவாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சட்டமன்றங்களில் பெண்களின் குறைந்தபட்சம் மூன்றில் ஒரு பங்கு பங்களிப்பு, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் திட்டங்களை மக்களை உள்ளடக்கியதாக மாற்றும்; அதேபோல மக்களவையில் பெண்களின் பங்களிப்பு கொள்கை உருவாக்கம், சட்டம் இயற்றுதல் மற்றும் தேசிய முன்னுரிமைகளை முடிவு செய்வதில் புதிய மாற்றத்தைக் கொண்டு வரும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆட்சி மற்றும் நிர்வாகத்தில் பெண்களை வலுவான பங்காளிகளாக மாற்றும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முயற்சிக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் ஆதரவு அளிக்க வேண்டும் என்று அமித் ஷா வலியுறுத்தியுள்ளார்.

“>

தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதித்துவத்தில் பெண்களுக்குச் சரியான பங்களிப்பை வழங்குவதில் மத்திய அரசு உறுதியாக நிற்கிறது என்ற அமித் ஷாவின் இந்தப் பதிவு, அரசியல் வட்டாரத்திலும் பொதுமக்கள் மத்தியிலும் முக்கியப் பேசுபொருளாக மாறியுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author