சிஆர்பிஎப் வீரர்கள் கட்டுப்பாட்டில் திருப்பரங்குன்றம் மலை..!!

Estimated read time 1 min read

திருப்பரங்குன்றத்தில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி இன்று மாலை தீபத்தூணில் தீபம் ஏற்றப்பட உள்ளது. இதனை முன்னிட்டு ஐன்று அதிகாலை முதலே திருப்பரங்குன்றம் கோவிலில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். அங்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

தீபம் ஏற்றுவதற்கு வசதியாக தீபத்தூண் அருகே மரப்பலகைகள் கொண்டு மேடை அமைக்கும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் மலைப்பாதையில் கடந்த 24-ந்தேதி உச்சி பிள்ளையார் கோவில் வரை மட்டுமே மின்விளக்குகள் போடப்பட்டிருந்த நிலையில், இன்று தீபத்தூண் வரை மின்விளக்குகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் இன்று தீபம் ஏற்றப்பட உள்ளது. இதையடுத்து, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி திருப்பரங்குன்றம் மலையில் பாதுகாப்புப்பணியில் சிஆர்பிஎப் வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். பாதுகாப்புப்பணிக்காக சிஆர்பிஎப் வீரர்கள் திருப்பரங்குன்றம் மலைக்கு வந்துள்ளனர். சிஆர்பிஎப் வீரர்கள் திருப்பரங்குன்றம் மலையை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author