நவம்பர் 29ஆம் நாள் சீன மக்கள் விடுதலைப் படையின் மேற்கு பிராந்தியத்தைச் சேர்ந்த கடல் மற்றும் வான் படைப் பிரிவு சீனாவுக்கு உரிய ஹுவாங்யேன் தீவுப் பகுதியில் அதற்கு அருகிலுள்ள கடல் மற்றும் வான் பகுதியில் போர்-தயார் நிலை ரோந்து பணி மேற்கொண்டது. சீன கடற்காவற்துறையின் கப்பல் அதே பகுதியில் சட்ட அமலாக்கக் கண்காணிப்பு மேற்கொண்டுள்ளது.
ஹுவாங்யேன் தீவுப் பகுதியில் இருந்து பிலிப்பைன்ஸ் கப்பல் மற்றும் விமானம் விரட்டப்பட்ட படங்கள் அதே நாள் வெளியிடப்பட்டன.
நவம்பர் திங்களில் சீனக் கடல் மற்றும் வான்படைப் பிரிவும் கடற்காவற்துறையும் ஹுவாங்யேன் தீவுப் பகுதியின் மீதான கண்காணிப்பை வலுப்படுத்தி, தொடர்புடைய கடல் மற்றும் வான் பகுதியில் சட்ட மீறல் மற்றும் ஆத்திரமூட்டல் நடத்தை பயனுள்ள முறையில் சமாளித்து, நாட்டின் இறையாண்மையையும் பாதுகாப்பையும் உறுதியாக பாதுகாத்து, தென் சீன கடலின் அமைதியையும் நிதானத்தையும் பேணிகாத்துள்ளது.
