சீனப் பொருளாதார வளர்ச்சியில் பன்னாடுகளின் செய்தி ஊடகங்களும் நிறுவனங்களும் தொடர்ச்சியாகக் கவனம் செலுத்தி வருகின்றன.
அக்டோபர் திங்களில் சீனாவின் பெரிய தொழில் நிறுவனங்களின் லாபம் கடந்த ஆண்டின் அதே திங்களில் இருந்ததை விட 20.1 சதவீதம் அதிகரித்துள்ளது. மே திங்களுக்குப் பிறகு காணப்பட்ட மிக வேகமான வளர்ச்சி இதுவாகும் என்று அமெரிக்க சி.என்.பி.சி செய்தி வெளியிட்டது. செயற்கை நுண்ணறிவுத் தொழில்துறைச் சங்கிலி மற்றும் உயர் தொழில் நுட்பத் தயாரிப்புத் துறையின் சீரான வளர்ச்சி தொழிற்துறை நிறுவனங்களுக்கு நிலையான உந்து சக்தியை வழங்கி வருகின்றது என்று இச் செய்தியில் கருத்து தெரிவிக்கப்பட்டது.
சீனாவின் நாணயமான ரென்மின்பியின் செயல்திறன் இனி வெளிப்புற டாலர் சுழற்சியால் மட்டுமே தீர்மானிக்கப்படுவதில்லை என்று சர்வதேச நிதி ஆராய்ச்சித் தளமான டி.எம்.ஜி.எம். கருத்து தெரிவித்துள்ளது. வலுவான அந்நியச் செலாவணி வழங்கலும் ஏற்றுமதியாளர்கள் தங்கள் அந்நியச் செலாவணி வருவாயை மாற்றிக்கொள்ளும் விருப்பம் அதிகரித்தலும் ரென்மின்பிக்கு உறுதியான அடிப்படை ஆதரவை வழங்குகின்றன என்று இக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்டது.
சீன-தென் கொரிய சுயேச்சை உடன்படிக்கையின் கீழுள்ள சேவை மற்றும் முதலீடு தொடர்பான பேச்சுவார்த்தை சாராம்ச ரீதியில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது இரு நாடுகளின் சுற்றுலா மற்றும் நுகர்வுச் சந்தைக்கு மேலதிக ஒத்துழைப்பு வாய்ப்புகளைக் கொண்டு வரும் என்று தி கொரிய டைம்ஸ் கூறியது.
