கோவை மக்களின் தாகம் தீர்க்க அப்பர் பவானி அணையில் இருந்து திறக்கப்பட்ட நீரால், பில்லூர் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 16 அடி உயர்ந்துள்ளது.
கோவையில் கோடை வெயிலின் காரணமாக, பில்லூர் அணை மண் திட்டுக்களாக காட்சியளிக்கும் நிலை உருவானது.
இதனையடுத்து நீலகிரி மாவட்டத்தில் உள்ள அப்பர் பவானி அணையில் இருந்து, வினாடிக்கு சுமார் ஆயிரத்து 500 கனஅடி வீதம் நீர் திறந்து விடப்பட்டது.
இதனால் பில்லூர் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 54 அடியில் இருந்து, 70 அடியாக உயர்ந்துள்ளது.