டெல்லி : பெட்ரோல் விலை உயர்ந்து வரும் இந்தக் காலத்தில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாங்குவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக தினமும் ஆபீஸ் செல்வது, குழந்தைகளை ஸ்கூலில் கொண்டு போய் விடுவது மற்றும் நகருக்குள் சுலபமாக வலம் வருவது போன்றவற்றுக்கு ஐகியூப் ஒரு சிறந்த தேர்வாக உள்ளது. தற்போது இந்த ஸ்கூட்டர் மொத்தம் ஆறு விதமான வேரியண்ட்களில் விற்பனைக்குக் கிடைக்கிறது. அதில் உங்களுக்கேற்ற சரியான மாடல் எது என்பதை இப்போது பார்ப்போம்.
TVS iQube 2.3 kWh
இது டிவிஎஸ் ஐகியூப் வரிசையில் உள்ள ஆரம்ப நிலை (பேஸ்) வேரியண்ட் ஆகும். இதில் 2.3 kWh திறன் கொண்ட பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இதன் IDC தரவுப்படி ஒருமுறை சார்ஜ் செய்தால் 114 கிலோமீட்டர் வரை மைலேஜ் தரும். மேலும் இதன் உச்ச வேகம் மணிக்கு 68 கிமீ ஆகும். தினசரி அலுவலகத்திற்கு அருகில் செல்வோருக்கும், குறைந்த தூரப் பயணம் மேற்கொள்வோருக்கும் இந்த மாடல் தோராயமாக 95,124 ரூபாய் எக்ஸ்-ஷோரூம் விலையில் கிடைக்கிறது.
TVS iQube 3.1 kWh
பேஸ் மாடலை விட கொஞ்சம் கூடுதல் பேட்டரி திறன் மற்றும் வேகம் விரும்புவோருக்காக இந்த 3.1 kWh வேரியண்ட் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இடம்பெற்றுள்ள பேட்டரி மூலம் 123 கிலோமீட்டர் வரை மைலேஜ் பெற முடியும். இதன் உச்ச வேகம் மணிக்கு 82 கிலோமீட்டராக உயர்த்தப்பட்டுள்ளது. நகர்ப்புற பயணங்களுக்கு மிகவும் ஏற்ற இந்த மாடலின் தோராயமான எக்ஸ்-ஷோரூம் விலை 1,06,462 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
TVS iQube 3.5 kWh
தினசரி பயணத்திற்கு இன்னும் கொஞ்சம் கூடுதல் மைலேஜ் தேவைப்படுபவர்களுக்காக இந்த 3.5 kWh மாடல் களமிறக்கப்பட்டுள்ளது. இது ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 145 கிலோமீட்டர் வரை அசத்தலான மைலேஜ் வழங்கும் திறன் கொண்டது. இதன் உச்ச வேகம் மணிக்கு 82 கிமீ ஆகும். நீண்ட தூர தினசரி பயணங்களை மேற்கொள்வோருக்கு ஏற்ற இந்த ஸ்கூட்டரின் எக்ஸ்-ஷோரூம் விலை தோராயமாக 1,12,200 ரூபாய் வரை ஆகும்.
TVS iQube MillionR Edition
இது 3.5 kWh பேட்டரி வசதியுடன் வெளிவந்திருக்கும் ஒரு ஸ்பெஷல் எடிஷன் மாடலாகும். சாதாரண மாடலைப் போலவே இதுவும் 145 கிலோமீட்டர் மைலேஜும், மணிக்கு 82 கிமீ உச்ச வேகமும் கொண்டுள்ளது. இதன் தனித்திறன் என்னவென்றால், இது பார்க்க மிகவும் ரசிக்க வைக்கக்கூடிய ‘அவரா கிரீன்’ (Aurora Green) கலர் ஆப்ஷனில் வருகிறது. இதன் தோராயமான எக்ஸ்-ஷோரூம் விலை 1,15,751 ரூபாயாக உள்ளது.
