ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையின் நீர்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்ய வேண்டி விவசாயிகள் சிறப்பு வழிபாடு நடத்தினர்.
கோடை வெயிலின் காரணமாக பவானி அணையின் நீர்மட்டம் 45 அடியாக குறைந்ததால், குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து பவானி அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ய வேண்டி, அருள்மிகு சாகர் விநாயகருக்கு, 108 குடம் தண்ணீர் எடுத்து வந்து ஊற்றி விவசாயிகள் சிறப்பு பூஜை நடத்தினர்.
இதில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.