தமிழகத்தில் ரேஷன் கடைகளில் ரேஷன் பொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதாக புகார் எழுந்த நிலையில் மே மற்றும் ஜூன் மாதத்திற்கான பருப்பு மற்றும் பாமாயில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி சற்றுமுன் அறிவித்துள்ளார்.
கடந்த மூன்று ஆண்டில் 14,697 கோடியில் பருப்பு, 64.42 கோடியில் எண்ணெய் வழங்கப்பட்டுள்ளது என்றும் மே மாதத்திற்கான பருப்பு மற்றும் பாமாயிலை ஜூன் மாதம் கடைசி வரை ரேஷன் கடைகளில் பொதுமக்கள் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அவர் அறிவித்துள்ளார். தமிழக அரசின் இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.