கன்னட நட்சத்திர நடிகர் யஷ் நடிப்பில் வெளியாகியுள்ள ‘டாக்ஸிக்’ திரைப்படத்திற்கு தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
படத்தில் பெண்கள் சித்தரிக்கப்பட்டுள்ள விதம் மற்றும் வன்முறை காட்சிகள் இளைஞர்களின் மனநிலையை பாதிக்கும் என கோவை பொதுக்கூட்டத்தில் அவர் பேசியுள்ளார்.
கோவையில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றிய அண்ணாமலை, மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்தை நேரடியாக விமர்சித்துள்ளார்.
“நகர்ப்புறங்களில் மேடைகளில் நின்று பெண்களின் பாதுகாப்பு பற்றிப் பேசுகிறோம். ஆனால், தணிக்கை வாரியமோ இதுபோன்ற திரைப்படங்களுக்குச் சான்றிதழ் கொடுத்து திரையரங்குகளுக்கு அனுப்புகிறது. இந்தத் திரைப்படம் பெண்களுக்கு எவ்வித மரியாதையையும் அளிக்கவில்லை; மாணவர்களும் இளைஞர்களும் இதைப் பார்த்தால் நாட்டின் நிலை என்னவாகும்?” என்றார்.
‘டாக்ஸிக்’ திரைப்படத்திற்கு அண்ணாமலை கடும் எதிர்ப்பு: பெண்களை இழிவுபடுத்துவதாகக் குற்றச்சாட்டு
