சீனாவில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்ட சிலி அரசுத் தலைவர் கேப்ரியல் போரிக்கை, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 17ஆம் நாள் பெய்ஜிங்கில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
தென் அமெரிக்க நாடுகளில், சீன மக்கள் குடியரசுடன் தூதாண்மையுறவை நிறுவிய முதலாவது நாடாக சிலி விளங்குகிறது. ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையை சீனாவும் லத்தீன் அமெரிக்காவும் கூட்டாகக் கட்டியமைத்துள்ள முன்னோடியாகவும் சிலி அமைந்துள்ளது என்று ஷிச்சின்பிங் தெரிவித்தார்.
சிலியுடன் இணைந்து பொருளாதார மற்றும் வர்த்தகம், அடிப்படை வசதி போன்ற பாரம்பரிய துறைகளில் ஒத்துழைப்பை ஆழமாக்குவதோடு, தூய்மையான எரியாற்றல், எண்ணியல் பொருளாதாரம், அறிவியல் தொழில்நுட்பப் புத்தாக்கம் உள்ளிட்ட புதிய துறைகளுக்கான ஒத்துழைப்பு வாய்ப்புக்களை உருவாக்கவும் சீனா விரும்புவதாக ஷிச்சின்பிங் வலியுறுத்தினார்.
லத்தீன் அமெரிக்க-சீன உறவின் வளர்ச்சி வரலாற்றில், சிலி ‘முதல் முறை’ ரீதியிலான சாதனைகளைப் படைத்து பெருமையடைந்துள்ளது. ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்மொழிவை சிலி வெகுவாகப் பாராட்டியதோடு தொடர்ந்து அதில் ஆக்கப்பூர்வமாகப் பங்கெடுக்கும் என்று போரிக் தெரிவித்தார்.