தென்மேற்கு சீனாவின் யுன்னான் மாநிலத்தின் பு அர் மாவட்டத்தில் உள்ள ஜிங்மாய் மலையில் பழமையான தேயிலை காடுகளின் பண்பாட்டு தளம், ஞாயிற்றுக்கிழமையன்று யுனெஸ்கோவின் உலகப் பண்பாட்டு மரபுச் செல்வப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.
செளதி அரேபியாவின் ரியாதில் நடைபெற்ற யுனேஸ்கோவின் 45ஆவது உலக மரபுச் செல்வ மாநாட்டில், பரிசீலனைக் குழு செப்டம்பர் 17ஆம் நாளில் இம்முடிவை எடுத்தது.
இது, உலகளாவில் தேயிலை தலைப்பிலான பாரம்பரியகளம், முதன்முறையாக உலகப் பண்பாட்டு மரபுச் செல்வங்களில் சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தற்போது வரை, யுனேஸ்கோவின் உலக மரபுச் செல்வப் பட்டியலில் சீனாவுக்கு சொந்தமான தளங்களின் மொத்த எண்ணிக்கை 57ஐ எட்டியது.ஜிங்மாய் மலையில் பழமை தேயிலை காடுகளின் பண்பாட்டு தளத்தில், செயற்கை முறையில் பயிரிடப்பட்ட பழமை தேயிலை காடுகளின் 5 நிலப்பரப்புகள், 9 பழமை கிராமங்கள், 3 பாதுகாப்பு காடுகள் ஆகியவை இடம்பெறுகின்றன.