உள்ளூர் நேரப்படி 2025ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் நாள், போலாந்து அரசுத் தலைவர் கரோல் நவ்ரோக்கி வார்சாவில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழு உறுப்பினரும், சீன வெளியுறவு அமைச்சருமான வாங்யீயைச் சந்தித்துரையாடினார்.
சந்திப்பின் போது, நவ்ரோக்கி கூறுகையில், சீனா, உலக கவனத்தை ஈர்க்கும் சாதனை புரிந்துள்ளதைப் பாராட்டினார். சீனாவுடன் இணைந்து தொடர்பை வலுப்படுத்தி ஒத்துழைப்பை ஆழமாக்கி இரு நாட்டுறவின் தொடரவல்ல வளர்ச்சியை முன்னேற்ற விரும்புவதாக அவர் தெரிவித்தார்.
இரு நாட்டு அரசுத் தலைவர்களின் தொலைநோக்கு வாய்ந்த தலைமையில், சீன-போலாந்து பன்முக நெடுநோக்குக் கூட்டாளியுறவு நிலையான வளர்ச்சியடைந்து வருகிறது.
போலாந்துடன் இணைந்து தொலைநோக்கு ரீதியில் பரஸ்பர நம்பிக்கையைத் தொடர்ந்து ஆழமாக்கி இரு நாட்டு பன்முக நெடுநோக்குக் கூட்டாளியுறவு தொடர்ந்து வளர்வதைக் கூட்டாக முன்னேற்றச் சீனா விரும்புகிறது என்று வாங்யீ தெரிவித்தார்.