ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் சித்திரைத் தேர்த் திருவிழா கோலாகலம்!

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் சித்திரைத் தேர்த் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்து வழிபட்டனர்.

திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சித்திரைத் திருவிழா கடந்த 28-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவின் முக்கிய நிகழ்வாக இன்று நடைபெற்ற சித்திரைத் தேரோட்டத்தில் நம்பெருமாள், திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

தேர் திருவிழாவையொட்டி ஆண்டாள் கோவிலில் இருந்து கொண்டு வரப்பட்ட பட்டு வஸ்திரம், கிளி மாலை உள்ளிட்டவையால் பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

இந்த நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு கோவிந்தா, ரங்கா என்ற முழக்கங்களுடன் தேரை வடம் பிடித்து இழுத்து வழிபட்டனர்.

You May Also Like

More From Author