காசாவில் இஸ்ரேலிய இராணுவம் அமெரிக்க ஆயுதங்களைப் பயன்படுத்தி சர்வதேச மனிதாபிமானச் சட்டத்தை மீறியிருக்கிறது என்று அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.
அதனால், அமெரிக்கா தனது கூட்டாளியான இஸ்ரேலை கடுமையாக விமர்சித்துள்ளது.
இதற்கு மத்தியில், தெற்கு காசா நகரமான ரஃபாவில் இராணுவத் தாக்குதலை நடத்த இஸ்ரேலின் போர் அமைச்சரவை ஒப்புதல் அளித்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆனால், காசாவில் அமெரிக்கத் ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டு சர்வதேச சட்டங்கள் மீறப்பட்டிருக்கலாம் என்ற குற்றச்சாட்டை சரிபார்க்க முடியவில்லை என்று இஸ்ரேல் நிர்வாகம் கூறியுள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய எல்லை தாண்டிய தாக்குதலை, இஸ்ரேல் காசா மீது 7 மாதங்களாக தாக்குதல் நடத்தி வருகிரது.