பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-நவாஸ் கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகினார் ஷெபாஸ் ஷெரீஃப்

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப், பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் (PML-N) கட்சியின் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார்.
அவர் தனது ராஜினாமா கடிதத்தை PML-Nயின் மேலிட தலைவர் நவாஸ் ஷெரீப்பிடம் அளித்துள்ளார்.
இதனைதொடர்ந்து, PML-Nயின் புதியகட்சி தலைவரை தேர்ந்தெடுப்பதற்காக மே 28 அன்று லாகூரில் பொதுக்குழு கூட்டம் ஒன்று நடைபெற உள்ளது.
ஆரம்பத்தில், இந்த கூட்டத்தை மே 11 அன்று நடத்த அக்கட்சி திட்டமிட்டிருந்தது. ஆனால், அது தற்போது மாற்றப்பட்டுள்ளது.
அவரது தலைமையின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, நவாஸ் ஷெரீப்பே கட்சித் தலைவராக தொடர வேண்டும் என்று PML-N இன் பஞ்சாப் பிரிவு கேட்டுக்கொண்டதாக ராணா சனாவுல்லா தெரிவித்துள்ளார்.

You May Also Like

More From Author