அமெரிக்க அதிபருக்கே எச்சரிக்கையா? “உங்க வேலைய பாருங்க” – உலக மேடையில் கர்ஜித்த கமல்ஹாசன்..!! 

Estimated read time 1 min read

இந்திய விவகாரங்களில் வெளிநாடுகள் தலையிடுவதைக் கண்டித்து, மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் அமெரிக்க அதிபருக்குக் காட்டமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அமெரிக்க அதிபரின் சமூக வலைதளக் கணக்கைக் குறிப்பிட்டுப் பதிவிட்டுள்ள அவர், இந்தியா ஒரு சுதந்திரமான மற்றும் இறையாண்மை கொண்ட தேசம் என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

“கடல் கடந்து வரும் அந்நிய நாடுகளின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படியும் நிலையில் நாங்கள் இனி இல்லை” என்று அவர் தனது பதிவில் அதிரடியாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “அமெரிக்க அதிபரே, உங்கள் நாட்டு விவகாரங்களை மட்டும் கவனித்துக்கொண்டு உங்கள் வேலையைப் பாருங்கள்” (Mind your own business) என்று மிகக் கடுமையான தொனியில் கமல்ஹாசன் எச்சரித்துள்ளார்.

இரு நாடுகளுக்கு இடையிலான பரஸ்பர மரியாதையே உலக அமைதிக்கு அடிப்படை என்று சுட்டிக்காட்டிய அவர், அதே சமயம் அமெரிக்க மக்களுக்கும் அந்த தேசத்திற்கும் தனது வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.

இந்தச் சுடச்சுட அறிக்கை தற்போது அரசியல் வட்டாரத்திலும் சமூக வலைதளங்களிலும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author