டி20 உலகக்கோப்பை 2026: இந்திய வீரர்கள் தங்கள் குடும்பத்தினருடன் தங்க BCCI தடை  

Estimated read time 1 min read

தற்போது நடைபெற்று வரும் 2026 டி20 உலகக் கோப்பை தொடரில், இந்திய கிரிக்கெட் வீரர்கள் தங்கள் மனைவி அல்லது குடும்பத்தினருடன் தங்குவதற்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) அதிரடித் தடை விதித்துள்ளது.
இது தொடர்பான அணி நிர்வாகத்தின் கோரிக்கையைப் பிசிசிஐ திட்டவட்டமாக நிராகரித்துள்ளது.
கடந்த 2024-25 பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரில் ஆஸ்திரேலியாவிடம் 1-3 என்ற கணக்கில் இந்தியா தோல்வியடைந்ததை தொடர்ந்தே இந்த முடிவு எடுக்கப்பட்டது.
அந்த தொடரின் போது, சில வீரர்கள் தங்கள் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட்டதால், முக்கியமான ஆலோசனைக் கூட்டங்களில் பங்கேற்கவில்லை என்று பயிற்சியாளர்கள் தரப்பில் புகார் எழுந்தது.
இதன் விளைவாக, நீண்ட வெளிநாட்டுத் தொடர்களில் 14 நாட்களுக்கு மேல் குடும்பத்தினருடன் தங்கக் கூடாது என்ற விதிமுறை அமலுக்கு வந்தது.

You May Also Like

More From Author