தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு வரும் நீர்வரத்து மீண்டும் உயர்ந்துள்ளது.
கடந்த 2 நாட்களாக 50 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து, தற்போது 65 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் விதிக்கபட்ட தடை 7வது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், காவிரி கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.