வங்கதேச பொருட்களுக்கான வரி 19% ஆக குறைப்பு – டிரம்ப் அறிவிப்பு!

Estimated read time 0 min read

வங்கதேச பொருட்களுக்கான இறக்குமதி வரியை 37 சதவீதத்தில் இருந்து 19 சதவீதமாக அமெரிக்க அதிபர் டிரம்ப் குறைத்துள்ளார்.

வங்கதேச பொதுத் தேர்தலுக்கு 2 நாட்கள் இருக்கும் நிலையில், அமெரிக்கா அந்நாட்டு பொருட்களுக்கான வரியை குறைத்தது. இந்த ஒப்பந்தம் குறித்து வங்கதேச இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், இரு நாடுகளுக்கு இடையே பரஸ்பர வரி குறைப்பு ஒப்பந்தம் கையெழுத்தானதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தை கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஒன்பது மாதங்களுக்கும் மேலாக நீடித்தன என்றும் வங்கதேச பொருட்களுக்கான இறக்குமதி வரியை 37 சதவீதத்தில் இருந்து 19 சதவீதமாக அமெரிக்கா குறைத்துள்ளதாக யூனுஸ் தெரிவித்துள்ளார்

You May Also Like

More From Author