ஜூன் மாதம் மீண்டும் வெளியாகிறது கமல்ஹாசனின் ‘இந்தியன்’ திரைப்படம்

1996 ஆம் ஆண்டு வெளியாகிய பிளாக்பஸ்டர் திரைப்படமான கமல்ஹாசனின் ‘இந்தியன்’ வரும் ஜூன் மாதம் மீண்டும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்று அறிவிக்கப்ட்டுள்ளது.
மெகா சூர்யா புரொடக்ஷன்ஸின் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
ஷங்கர் சண்முகம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வரும் ஜூன் 7ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
‘இந்தியன்-2’ திரைப்படம் 2025ஆம் ஆண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அதன் முதல் பாகமான ‘இந்தியன்’ தற்போது வெளியாக உள்ளது.
இப்படத்தில் மனிஷா கொய்ராலா இணை நாயகியாக நடித்துள்ளார். ஏஆர் ரஹ்மான் இதற்கு இசையமைத்துள்ளார்.
அறிவிப்பின்படி, இந்தியன் ரீ-ரிலீஸ் டிரெய்லர் நாளை வெளியாகும்.

Please follow and like us:

You May Also Like

More From Author