சென்னையில் 23வது சர்வதேச திரைப்பட விழா தொடங்கியுள்ளது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்தியம் திரையரங்கத்தில் INDO CINE APPRECIATION FOUNDATION சார்பில் தமிழக அரசின் பங்களிப்புடன் 23வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவின் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் சாமிநாதன், நடிகை சிம்ரன் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியினை தொடக்கி வைத்தனர். கௌரவ விருந்தினராக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கலந்து கொண்டார்.
டிசம்பர் 18 ஆம் தேதி வரை 8 நாட்கள் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில், 51 நாடுகளை சார்ந்த 122 திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன. குறிப்பாக ஆஸ்கர் மற்றும் கேன்ஸ் திரைப்பட விருதுகள் பெற்ற திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன. ரஜினிகாந்தின் 50 ஆண்டுகால திரை பயணத்தையொட்டி பாட்ஷா திரைப்படம் ஒளிபரப்பப்பட உள்ளது.
