தமிழகம் தலைநிமிர் தமிழனின் பயணம்’ என்ற பெயரில் பிரசாரம் மேற்கொண்டு வரும் பா.ஜனதா மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், நேற்று காஞ்சிபுரம் மாவட்டத்தில்ப் பல்வேறு பகுதிகளில் பிரசாரம் செய்து வாக்காளர்களை சந்தித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:செங்கோட்டையன் எனக்கு மிக நெருக்கமான, மிகவும் தேவையானவர். ஆனால், அவருக்கு என்னைச் சுற்றி ஏன் கோபம் என எனக்குத் தெரியவில்லை. நான் கூறிய கருத்து முழுமையாக நியாயமானது. அவர் தற்போது ஒரு புதிய இயக்கத்தில் இணைந்துள்ளார்; அந்த இயக்கம் இன்னும் முழுமையாக வளர்ச்சி பெறவில்லை.
இப்படியிருக்க, ‘ஆட்சிக்கு வருகிறோம்’ என்று உடனே கூறுவது எந்த விதத்திலும் நியாயமானதாக தெரியவில்லை என்பதையே நான் சுட்டிக்காட்டினேன்.
மேலும் என்னை டெபாசிட் இழக்கச் செய்வதற்காகவே அவர் நெல்லையில் போட்டியிடப் போகிறாரா என்பதும் எனக்கு தெரியவில்லை,” என்றார்.
