சீன-ஜப்பான் தலைமையமைச்சர்களின் பேச்சுவார்த்தை

 

சீன தலைமையமைச்சர் லீச்சியாங்26ஆம் நாள், சியோல் நகரில், ஜப்பான் தலைமையமைச்சர் ஃபுமியோ கிஷிடாவைச் சந்தித்தார்.

கடந்த ஆண்டின் நவம்பர் திங்களில், சான்ஃபிரான்சிஸ்கோவில் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் ஃபுமியோ கிஷிடாவைச் சந்தித்து, முக்கிய பொது கருத்துக்களை எட்டியுள்ளார். இரு நாடுகளுக்கிடையில் நெடுநோக்கு ரீதியில் கூட்டு நலன் தரும் உறவை முழுமையாக முன்னேற்ற இரு தரப்பினரும் ஒருமனதாக ஏற்றுக்கொண்டுள்ளனர். இது, இரு தரப்பின் வளர்ச்சிக்கான முக்கிய அரசியல் வழிகாட்டியாக மாறியுள்ளது.

வாக்குறுதிகளைப் பின்பற்றி, வரலாறு விட்டுச் சென்ற பிரச்சினை மற்றும் தைவான் பிரச்சினையைச் சரியாக் கையாள வேண்டும். சீனத் தரப்புடன் இணைந்து, புதிய யுகத்திற்கு ஏற்ற ஆக்கப்பூர்வமான, நிதானமான சீன-ஜப்பானிய உறவை கட்டியமைக்க வேண்டும். ஃபுகுஷிமாகென் அணு மின் நிலையத்தின் அணுக் கழிவு நீரை வெளியேற்றுவது, மனித குலத்தின் உடல் நலத்துடன் தொடர்புடையது. சொந்த பொறுப்புகளையும் கடமைகளையும் ஜப்பான் உறுதியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று லீச்சியாங் தெரிவித்தார்.

You May Also Like

More From Author