வெப்ப அலை : தேசிய பேரிடராக அறிவிக்க அறிவுறுத்தல்!

ராஜஸ்தானில் வெப்பத் தாக்கத்தால் 5 பேர் பலியான நிலையில், வெப்ப அலையை தேசிய பேரிடராக அறிவிப்பதற்கான தருணம் வந்துவிட்டதாக ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

ராஜஸ்தானில் வெப்ப அலைக்கு 5 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விவகாரத்தை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்ட ராஜஸ்தான் உயர்நீதிமன்ற நீதிபதி அனூப் குமார், வெப்ப அலையால் உயிரிழந்தோருக்கு இழப்பீடு வழங்குமாறு மாநில அரசுக்கு உத்தரவிட்டார்.

மேலும் வெப்ப அலையையும், குளிர்க்காற்றையும் தேசிய பேரிடராக அறிவிக்க பரிசீலிக்குமாறு மாநில அரசுக்கு நீதிபதி அறிவுறுத்தினார்.

You May Also Like

More From Author