சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், செப்டம்பர் 10 மற்றும் 11ம் நாட்களில் ஷான் ஷி மாநிலத்தின் பௌஜி நகரிலும், கன் சூ மாநிலத்தின் தியேன் ஷுய் நகரிலும் முறையே ஆய்வுப் பயணம் மேற்கொண்டார்.
பௌஜி நகரில், தொல்பொருட்களின் பாதுகாப்பு மற்றும் பயன்பாடு, வெய் ஆற்றின் உயிரினச் சூழல் பாதுகாப்பு மற்றும் மேலாண்மை முதலியவற்றைக் கேட்டறிந்தார்.
தியே ஷுய் நகரில், உள்ளூர் பண்பாட்டு மரபுச் செல்வங்களின் பாதுகாப்பு மற்றும் பரவல், மலைப் பகுதியிலுள்ள சிறப்பு வாய்ந்த நவீன தோட்டத் தொழில் வளர்ச்சி முதலியவற்றை ஷிச்சின்பிங் அறிந்து கொண்டார்.