ஆந்திரா சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றிபெற அதிக வாய்ப்பு 

மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி 43 நாட்களுக்குப் பிறகு இன்று நிறைவடைகிறது.
ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள 25 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்காக மே 13-ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது.
இந்நிலையில், ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட தேர்தல் முடிவுகள் ஜூன் 4, 2024 அன்று அறிவிக்கப்பட உள்ளன.
ஆந்திராவில் இந்த ஆண்டு மக்களவைத் தேர்தலில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஆளும் YSRC கட்சிக்கும், காங்கிரஸ் தலைமையிலான இண்டியா கூட்டணிக்கும், பாஜக தலைமையிலான NDA கூட்டணிக்கும் இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது.
சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் மற்றும் பவன் கல்யாண் தலைமையிலான ஜன சேனா கட்சியுடன் (ஜேஎஸ்பி) பாஜக ஒரு மூலோபாய கூட்டணியை அமைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Please follow and like us:

You May Also Like

More From Author