சீனத் தேசிய வனவியல் மற்றும் புல்வெளி நிர்வாகம் அண்மையில் வெளியிட்ட அறிவிப்பில், சான்சி மாநிலத்தின் ஷான்யின் மாவட்டத்திலுள்ள சாங்கான்ஹே ஆறு உள்ளிட்ட 22 சதுப்பு நிலங்களை, தேசிய நிலை முக்கிய சதுப்பு நில பெயர் பட்டியலில் சேர்ப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, சீனத் தேசிய நிலை முக்கிய சதுப்பு நிலங்களின் எண்ணிக்கை 80ஐ எட்டியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக, சீனாவில் 3700க்கும் மேலான சதுப்பு நிலப் பாதுகாப்புத் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. புதிதாக அதிகரிக்கப்பட்டுள்ள மற்றும் மீட்கப்பட்டுள்ள சதுப்பு நிலங்களின் நிலப்பரப்பு 10 லட்சம் ஹெக்டரைத் தாண்டியுள்ளது.
அடுத்த காலக் கட்டத்தில், சீனத் தேசிய வனவியல் மற்றும் புல்வெளி நிர்வாகம், சதுப்பு நிலப் பாதுகாப்புச் சட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்தி, சதுப்பு நிலப் பாதுகாப்பு மற்றும் மீட்பு அமைப்புமுறையை முன்னேற்றி, கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு அமைப்புமுறையின் கட்டுமானத்தை ஆராய்ந்து, சதுப்பு நிலத்தில் உயிரின அமைப்புமுறையின் தரம் மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
