ஜூன் 5ஆம் நாள் உலக சுற்றுச்சூழல் தினமாகும். மனிதகுலத்தின் பொது வீடான புவி, மனிதகுலத்தால் ஏற்படுத்தப்ட்ட பல்வகை சுற்றுச்சூழல் பிரச்சினைகளால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.
சுற்றுச்சூழலைப் பாதுகாத்தால் தான் நமது கூட்டு வீட்டைப் பேணிக்காக்க முடியும் என்பது மனிதகுலத்தின் பொது நோக்கமாக மாறியுள்ளது.
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் முன்வைத்த பசுமை வளர்ச்சி என்னும் சிந்தனை அவரின் பொருளாதாரம் மற்றும் சூழலியல் நாகரிக சிந்தனையின் மையப் பகுதியாக மாறியுள்ளது.
நவ யுகத்தில் சீனா புதிய வளர்ச்சிக் கட்டுக்கோப்பை உருவாக்குவதற்கான முக்கிய விதி மற்றும் தத்துவ அடிப்படையாகவும் அது மாறியுள்ளது.
ஷிச்சின்பிங்கின் பசுமை வளர்ச்சி சிந்தனை மற்றும் சீனாவிலுள்ள அதன் அமலாக்கம், சீனாவுக்கு மட்டுமல்ல, உலகத்துக்கும் பொறுப்பேற்பதாகும்.
பன்னாடுகள் நவீனமயமாக்கலை நனவாக்கும் பாதையில் எதிர்நோக்கும் பிரச்சினை மற்றும் சவால்களுக்கு அது தீர்வாகவும் அமையும்.