பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (என்.டி.ஏ) புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள் வெள்ளிக்கிழமை கூடி நரேந்திர மோடியை தங்கள் தலைவராகத் தேர்ந்தெடுக்க உள்ளனர்.
அதைத் தொடர்ந்து கூட்டணி ஆட்சி அமைக்க உரிமை கோரும் என்று இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.
பாரதிய ஜனதா கட்சி (BJP) தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி இன்று ஜனாதிபதி திரௌபதி முர்முவை சந்தித்து புதிய அரசாங்கத்தை அமைக்க உரிமை கோரும் என கூறப்படுகிறது.
தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் கூட்டம், பார்லிமென்ட் சென்ட்ரல் ஹாலில் காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது.
அதன்பிறகு, NDA ஆட்சி அமைக்க ஜனாதிபதி திரௌபதி முர்முவிடம், MPக்கள் தங்கள் ஆதரவு கடிதங்களை வழங்குவார்கள், மோடியை புதிய பிரதமராக ஆதரிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.