சீனப் பொருளாதார வளர்ச்சியிலுள்ள நிலைத்தன்மை, புத்தாக்கம் மற்றும் மீள்தன்மை

Estimated read time 0 min read

இவ்வாண்டின் முதல் 5 மாதங்களில் சீனாவின் பொருளாதாரப் புள்ளிவிவரங்கள் ஜூன் 16ஆம் நாள் வெளியிடப்பட்டன. தொழிற்துறை, அன்னிய வர்த்தகம் உள்ளிட்டவற்றுக்கான முக்கிய பொருளாதாரக் குறியீடுகள் அதிகரித்துள்ளன. ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது, சீனப் பொருளாதாரம் சீரான நிலையில் இயங்கி வருகிறது.

நிலைத்தன்மை, புத்தாக்கம், மீள்தன்மை ஆகியவை, சீனப் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய சிறப்பு அம்சங்களாகும்.

உலகளவில் 2வது இடத்திலுள்ள சீனப் பொருளாதாரத்தின் நிலைத்தன்மை, உலக வளர்ச்சிக்கு நிலைத்தன்மை மற்றும் உறுதித்தன்மையை வழங்கியுள்ளது. பிரைஸ் வேட்டர் ஹவுஸ் கூப்பர் நிறுவனம் இவ்வாண்டின் முற்பாதியில் வெளியிட்ட உலகளாவிய தலைமைச் செயல் அதிகாரி ஆய்வின் சீன அறிக்கையின்படி, சீனப் பெருநிலப்பகுதியை முதல் மூன்று முதலீட்டு இலக்குகளில் ஒன்றாக தேர்ந்தெடுக்கும் தலைமைச் செயல் அதிகாரிகளின் விகிதம் தெளிவாக உயர்ந்துள்ளது.

மேலும், முதல் 5 மாதங்களில், உயர் தொழில் நுட்ப தயாரிப்புத் துறை, சுமார் 40 விழுக்காடான அதிகரிப்புக்கு பங்காற்றியுள்ளது. உபகரண உற்பத்தித் துறை சுமார் 60 விழுக்காடான அதிகரிப்புக்கு பங்காற்றியுள்ளது.

தவிரவும், மே மாதத்தில், சீனாவின் சரக்கு இறக்குமதி மற்றும் ஏற்றுமதி மதிப்பு இரண்டும் 10க்கும் மேலான அதிகரிப்பை பராமரித்துள்ளன. இது, சீனப் பொருளாதாரத்தின் மீள்தன்மை மற்றும் உயிராற்றலை வெளிப்படுத்தியுள்ளது.

You May Also Like

More From Author