பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகள் இன்று குடியரசு தலைவர் திரௌபதி முர்முவைச் சந்தித்து நரேந்திர மோடியின் தலைமையில் ஆட்சி அமைக்க உரிமை கோரியது.
பெரும்பான்மையை தாண்டி என்டிஏ வெற்றி பெற்றதால், நரேந்திர மோடி தொடர்ந்து மூன்றாவது முறையாக ஜூன் 9ம் தேதி பிரதமராக பதவியேற்க உள்ளார்.
முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்குப் பிறகு மூன்றாவது முறையாக இந்தியாவில் ஆட்சியைத் தக்கவைத்து கொள்ளும் இரண்டாவது பிரதமர் மோடி ஆவார்.
ஜூன் 4ஆம் மக்களவைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று டெல்லியில் கூட்டணிக் கட்சிகளின் கூட்டம் நடைபெற்றது.
2024 தேர்தலில் NDA கூட்டணி 292 இடங்களைக் கைப்பற்றியுள்ளது.
பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை இல்லை, என்றாலும் கூட்டணி கட்சிகளின் பலத்துடன் பாஜக ஆட்சி அமைக்கவுள்ளது.
ஆட்சி அமைக்க உரிமை கோரியது பாஜக கூட்டணி: மூன்றாவது முறையாக பிரதமர் ஆகிறார் மோடி
