சீன-அமெரிக்க உறவின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றிய முனைவர் ஹென்றி கிஸ்ஸிங்கர்
சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் நவம்பர் 30ஆம் நாள் கூறுகையில், முனைவர் ஹென்றி கிஸ்ஸிங்கர், சீன மக்களின் பழைய மற்றும் நல்ல நண்பராகவும், சீன-அமெரிக்க உறவின் பங்களிப்பாளராகவும் திகழ்கிறார். சீன-அமெரிக்க உறவின் வளர்ச்சிக்கு நீண்டகாலமாக ஆதரவு அளித்த அவர், 100க்கும் மேலான முறையாக சீனாவில் பயணம் மேற்கொண்டு, இரு நாட்டுறவின் இயல்பான வளர்ச்சிக்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பங்காற்றியுள்ளார் என்றார்.
மேலும், முனைவர் ஹென்றி கிஸ்ஸிங்கரின் நெடுநோக்கு பார்வை, அரசியல் துணிவு, தூதாண்மை அறிவுத்திறமை ஆகியவற்றை சீனாவும் அமெரிக்காவும் தொடர்ந்து வெளிக்கொணர்த்து, ஒன்றுக்கொன்று மதிப்பளிப்பது, சமாதான சக வாழ்வு, ஒத்துழைப்பு மூலம் கூட்டு வெற்றி பெறுவது ஆகியவற்றில் ஊன்றி நின்று, இரு நாட்டுறவின் சீரான வளர்ச்சியை முன்னேற்ற வேண்டும் என்றும் வாங் வென்பின் தெரிவித்தார்.