காலநிலை மாற்றம் மற்றும் அணு ஆற்றல் பங்கு பற்றிய 2ஆவது சர்வதேச மாநாடு அக்டோபர் 9ஆம் நாள் வியன்னாவில் துவங்கியது. சீன அணு ஆற்றல் நிறுவனத்தின் இயக்குநர் சாங் கெஜியன் இம்மாநாட்டில் பங்கெடுத்து சீனாவின் நிலைப்பாட்டை விளக்கிக் கூறினார்.
புத்தாக்கம், ஒருங்கிணைப்பு, பசுமை, திறப்பு, பகிர்வு ஆகியவற்றைப் பின்பற்றும் சீனாவின் புதிய வளர்ச்சி கருத்து, பாதுகாப்பு மற்றும் ஒழுங்கான முறையில் ஆக்கமுடன் அணு ஆற்றலை வளர்த்து, கார்பன் உச்சநிலை மற்றும் நடுநிலையை நிறைவேற்ற உதவும் நடவடிக்கைகள், மேலும் பெரும் அணு ஆற்றலின் பங்குடன் காலநிலை மாற்றத்தைச் சமாளிக்க வேண்டும் என்ற சீனாவின் நிலைப்பாடு ஆகியவை பற்றி, இம்மாநாட்டின் உயர் நிலை கருத்தரங்கில் உரை நிகழ்த்தியபோது அவர் பன்முகங்களிலும் அறிமுகம் செய்தார்.
உலகளாவிய காலநிலை மாற்றத்தைச் சமாளிப்பதில் சீனா ஆக்கப்பூர்வமாகப் பங்கெடுத்து செயல்பட்டு வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில், ஆண்டுக்கு சராசரியாக 3 விழுக்காடு ஆற்றல் நுகர்வு அதிகரிப்புடன் 6.5 விழுக்காடு பொருளாதார வளர்ச்சியை சீனா நிறைவேற்றியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
நடப்பு மாநாடு 5 நாட்கள் நடைபெறுகிறது. 80க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் 20க்கும் அதிகமான சர்வதேச அமைப்புகளைச் சேர்ந்த சுமார் 500 பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டுள்ளனர்.