கடந்த சில நாட்களாக, ஜப்பானின் ஃபுகுஷிமா அணுக்கதிரியக்க நீர் தொடர்ந்து பசிபிக் பெருங்கடலில் வெளியேறி வருகிறது. ஜப்பான் தவறான செயல்களைத் திருத்தம் செய்யவில்லை.
இதற்கு மாறாக, ஈட்டிமுனையை சீனாவுக்கு ஜப்பான் செலுத்துகிறது. சீனாவின் உள்நாட்டில் ஜப்பான் மீது வெறுப்புணர்வு தீவிரமாகியுள்ளது. ஜப்பான் மீதான அலைக்கழித்தல் நடவடிக்கைகளை சீன மக்கள் மேற்கொண்டுள்ளனர் என்று பல ஜப்பானின் செய்திஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
ஜப்பானின் நீர் வாழ் உயிரினங்களை இறக்குமதி செய்வது குறஇத்து சீனா விதித்துள்ள தடையை நீக்க வேண்டும் என்று ஜப்பான் தலைமையமைச்சர் மன்சுவோ கிஷிடா உள்ளிட்ட பல ஜப்பானிய அரசியல்வாதிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். சீனாவின் இத்தடைக்கு பதில் நடவடிக்கைகளை ஜப்பான் மேற்கொள்ளும் என்று அவர்கள் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.
ஜப்பான் தொடுத்துள்ள பொது மக்கள் கருத்துப் போரின் ஒரு பகுதியாக இதுவாகும். ஃபுகுஷிமா அணுக்கதிரியக்க நீர் தொடர்ந்து பசிபிக் பெருங்கடலில் வெளியேறுகின்ற நாட்களில், ஜப்பான் என்.எச்.கே செய்திஊடகம் வெளியிட்ட செய்தியின்படி, “பொய் தகவலை” தடுக்கும் வகையில், ஜப்பானின் வெளியுறவு அமைச்சகம் பரவல் கொள்கைகளை வகுத்துள்ளது என்று தெரிய வந்துள்ளது.
இது தொடர்பான செலவுத் தொகை 7 ஆயிரம் கோடி யென்னாகும். 2020ஆம் ஆண்டு ஜப்பான் வெளியிட்ட அணுக்கதிரியக்க நீரைக் கையாள்தல் அறிக்கையின்படி, இச்செலவு, அணுக்கதிரியக்க நீரை வெளியேற்றும் செலவை விட 20 மடங்கு அதிகம்.
ஜப்பான் அவதூறு பரப்பி, பொது மக்கள் கருத்துக்களைக் குழப்பஞ்செய்து,
சீனாவைக் குற்றச்சாட்டுவது ஜப்பானின் நோக்கமாகும். இந்நிகழ்வில் பாதிக்கப்பட்ட நாடாக ஜப்பான் போர்வையிட்டுள்ளது. சுற்றுச் சூழல் பாதுகாப்பு மற்றும் மனிதக் குலத்தின் ஆரோக்கியத்திற்குத் தீங்கு விளைவிக்கும் நாடாக தான் விளங்குவது எனும் உண்மையை ஜப்பான் மூடிமறைத்துள்ளது. வெளியுலகு கண்டனத்தை ஜப்பான் பொருட்படுத்தாமல் செயல்பட்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.