ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பியா ஆகிய மூன்று கண்டங்களை இணைக்கும் மையமாக சௌதி அரேபியா திகழ்கிறது.
இது பட்டுப்பாதை பொருளாதார மண்டலம் மற்றும் 21ஆம் நூற்றாண்டு கடல்வழி பட்டுப் பாதை ஆகியவற்றை ஒன்றாக இணைக்கும் இடமாகவும் திகழ்கிறது.
2016ஆம் ஆண்டு ஜனவரி திங்கள், சௌதி அரேபியாவின் மன்னரின் அழைப்பை ஏற்று, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் அந்நாட்டில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார்.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த பயணத்தில், தத்தமது வளர்ச்சி நெடுநோக்குத் திட்டங்கள் ஒன்றுடன் ஒன்று இணைய சீனாவும் சௌதி அரேபியாவும் ஒப்புக்கொண்டன.
அதைத் தொடர்ந்து 3 மாதங்களுக்குப் பிறகு 2016ஆம் ஆண்டு ஏப்ரலில், சௌதி அரேபியா, ‘2030 விருப்பக் காட்சி’ எனும் வளர்ச்சித் திட்டத்தை வெளியிட்டது. எண்ணெய் துறையை அதிக அளவில் சார்ந்திருக்கும் நிலையில் இருந்து விலகி பொருளாதார பல்வகைத்தன்மையுடன் கூடிய வளர்ச்சியை முன்னெடுக்க முடிவு எடுக்கப்பட்டது.
பாலைவனத்தில் ஒரு எதிர்கால நகரத்தைக் கட்டியமைக்க சீனாவும் சௌதி அரேபியாவும் இணைந்து செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், செங்கடல் புதிய நகரம், குறைந்த கார்பன் மற்றும் பசுமைசார் துறையில் முக்கிய ஒத்துழைப்புத் திட்டப்பணியாகும். எதிர்காலத்தில் இந்த நகரத்தில் மின்சாரம் 100 சதவீதம் தூய்மையான ஆற்றலில் இருந்து கிடைக்கும்.
இதற்காக, சீனத் தொழில் நிறுவனத்தால் சூரிய ஒளி மின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. பாலைவனப்பகுதியில் மணற்புயல் போன்ற வானிலை நிகழ்வுக் காரணமாக சீனத் தொழில் நிறுவனம் சுத்தம் செய்யக் கூடிய தானியங்கியை வடிவமைத்துள்ளது.
2030ஆம் ஆண்டு, இந்த புதிய நகரம், கட்டி முடிக்கப்படுவதற்கு பிறகு, ஆண்டுதோறும் 10 லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வரவேற்கப்படுவர். இத்திட்டம், சௌதி அரேபியாவின் ‘2030 விருப்பக் காட்சி’யும், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்மொழிவும் ஒத்துழைப்புடன் செயல்படுவதற்கான சிறந்த மாதிரியாக இருக்கும்.
2022ஆம் ஆண்டு டிசம்பர் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 6 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அந்நாட்டில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார். அப்போது, சௌதி அரேபியாவின் ‘2030 விருப்பக் காட்சி’, ‘பசுமை மத்திய கிழக்கு’ ஆகிய முக்கிய வளர்ச்சி முன்மொழிவுகளுக்கு ஆதரவு அளிக்கும் சீனா, சௌதி அரேபியாவின் தொழில் மயமாக்கத்தில் கலந்து கொண்டு, அதன் பொருளாதார பல்வகைத்தன்மை வளர்ச்சிக்குத் துணை புரியும் என்று ஷிச்சின்பிங் கூறினார்.
தற்போது, சீனா மற்றும் சௌதி அரேபியா இடையேயான ஒத்துழைப்புகள், அடிப்படை வசதிக் கட்டுமானம், தொழில் பூங்கா, 5ஜி தொலைத்தொடர்பு, சந்திரன் ஆய்வு, தொல்லியல் ஆய்வு, பண்பாட்டு பரிமாற்றம், மக்கள் தொடர்பு ஆகிய துறைகளில் சாதனைகளைக் கண்டுள்ளன.