50வது ஜி7 உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை இரவு இத்தாலி சென்றடைந்தார்.
இது தொடர்ந்து மூன்றாவது முறையாக பதவியேற்ற பிறகு அவரின் முதல் வெளிநாட்டு பயணமாகும்.
இத்தாலியின் அபுலியா பகுதியில் ஜூன் 13 முதல் 15 வரை நடைபெறும் இந்த உச்சிமாநாட்டில், ரஷ்யா-உக்ரைன் போர் மற்றும் இஸ்ரேல்-ஹமாஸ் போர் பேச்சுவார்த்தைகள் குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியின் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி இந்த மாநாட்டில் கலந்து கொள்கிறார்.