பாஸ்போர்ட் விண்ணப்பத்தில் வாழ்க்கைத் துணைவரின் பெயரைச் சேர்க்க அல்லது நீக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், இனிமேல் திருமணச் சான்றிதழ் சமர்ப்பிக்க தேவையில்லை.
அதற்கு பதிலாக ‘Annexure J’ எனப்படும் பிரமாணப் பத்திரம் போதுமானது என வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பாஸ்போர்ட் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: “வேலை, கல்வி, சுற்றுலா உள்ளிட்ட நோக்கங்களுக்காக ஆண்டுதோறும் பல லட்சம் மக்கள் பாஸ்போர்ட் மூலம் வெளிநாடு செல்கின்றனர். கடந்த சில மாதங்களில் பாஸ்போர்ட் விதிமுறைகளில் பல மாற்றங்களை மத்திய அரசு கொண்டு வந்தது. அதன் தொடர்ச்சியாக, தற்போதைய மாற்றத்தின் மூலம், விண்ணப்ப செயல்முறை மேலும் எளிமையாக்கப்பட்டுள்ளது”.
இந்த புதிய நடைமுறையால், தேவையற்ற ஆவணங்கள் மற்றும் தாமதங்கள் குறைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாஸ்போர்ட் விண்ணப்பத்தில் வாழ்க்கைத் துணைவர் பெயர் சேர்க்க/நீக்க எளிய வழி அறிமுகம்
